5196.

'இருவர் என்று இகழ்ந்தனைஎன்னின், யாண்டு
                                  எல்லை,
ஒருவன் அன்றேஉலகு அழிக்கும் ஊழியான்;
செரு வரும்காலை, என் மெய்ம்மை தேர்தியால்-
பொரு அருந் திருஇழந்து, அநாயம் பொன்றுவாய்.

     பொரு வரும் -ஒப்புமையில்லாத; திருவிழந்து - செல்வத்தை இழந்து;
அநாயம் - அநியாயமாக; பொன்றுவாய் ! - உயிர் அழியப்
போகின்றவனே !
இருவர் என்று - இராமலக்குவர்களை இருவர் தானேஎன்று; இகழ்ந்தனை
என்னின் -
இகழ்ந்து பேசினால் (அது முறையன்று); யாண்டு எல்லை - யுக
வருடங்களின் முடிவிலே; உலகு அழிக்கும் - உலகங்களை அழிக்கின்ற;
ஊழியான் - ஊழியின் தலைவனான சிவபிரான்; ஒருவன், அன்றே -
ஒருவன் அல்லவா; செருவரும் காலை - யுத்தம் வரும் சமயத்தில்; என்
மெய்ம்மை -
என்னுடைய மொழியின் உண்மையை; தேர்தி - ஆராய்ந்து
அறிவாய் (என் மொழியின்படி நடவாய் எனின்).

     ஊழியான் -சிவபிரான். ஊழி முதல்வனாய் நின்ற ஒருவன் என்று
திருவெம்பாவை பேசும். அநாயம் - அநியாயம். 'ஆவி அநாயமே உகுத்து
என் ? ஐய' (கம்ப. 7412)                                  (128)