'தனியன்நின்றனன்; தலை பத்தும் கடிது உகத் தாக்கி, பனியின்வேலையில் இலங்கையைக் கீழ் உறப் பாய்ச்சி, புனித மா தவத்துஅணங்கினைச் சுமந்தனென் போவென், இனிதின்' என்பதுநினைந்து, தன் கரம் பிசைந்திருந்தான்.
தனியன் -தனித்துள்ள யான்; நின்றனன் - எழுந்து நின்றஇராவணனின்; தலைபத்தும் - பத்துத் தலைகளும்; கடிது உகத் தாக்கி -வேகமாகச் சிதறும்படி மோதி; இலங்கையை - இலங்கை மாநகரை; பனிவேலையில் - குளிர்ந்த கடலின்கண்; கீழ் உற - அடிப்பகுதியை அடைய;பாய்ச்சி - அமிழ்த்துவிட்டு (பிறகு); புனிதம் - தூய்மையான; மாதவத்துஅணங்கினை - பெருந்தவம் செய்யும் பிராட்டியை; சுமந்தனென் - சுமந்துகொண்டு; இனிதின் போவென் - மகிழ்ச்சியுடன் (இராவணன்பால்) செல்வேன்;என்பது நினைந்து - என்பதைக் கருதி;தன் கரம் பிசைந்து - தன்னுடைய கரங்களைப் பிசைந்தபடி; இருந்தான் - சந்தர்ப்பம் நோக்கியிருந்தான்; தனியன் என்பதைஇராவணனுக்கு ஆக்கின் அஃது அனுமனுக்குஇழுக்கு. இராவணன் தனியே உள்ளான்; கொல்லல் எளிது என்று வீரனானஅனுமன் கருதான். (140)