5214.

'மூவரும் தேவர்தாமும் முரண் உக முற்றும் கொற்றம்,
பாவை ! நின்பொருட்டினால், ஓர் பழி பெற, பயன்
                                தீர் நோன்பின்

ஆ இயல்மனிதர்தம்மை அடுகிலேன்; அவரை
                                     ஈண்டுக்
கூவி நின்று,ஏவல் கொள்வேன்; காணுதி-குதலைச்
                                  சொல்லாய் !

     பாவை ! -பதுமை போன்றவளே; குதலைச் சொல்லாய் ! - இனிய
மொழி பேசுபவளே ! மூவரும் - மும்மூர்த்திகளும்; தேவர்தாமும் -
(மற்றைய) தேவர்களும்; முரண் உக - வலிமை குறைய; முற்றும் கொற்றம் -
நிறைவு பெற்ற என் வெற்றியானது; நின்பொருட்டினால் - உன் காரணமாக;
ஓர் பழி பெற - ஒரு பழிச் சொல்லை அடையும் வண்ணம்; பயன்தீர் -
பயனில்லாத; நோன்பின் - தவத்தையுடைய; ஆ இயல் மனிதர் தம்மை -
பசுவின் தன்மை கொண்ட மனிதரை; அடுகிலேன் - கொல்லேன்; அவரை -
அந்த இராமலக்குவரை; கூவி நின்று - அழைத்து; ஈண்டு ஏவல்
கொள்வென் -
இந்த இடத்தில் அவர்கள் செய்யும் பணிகளை ஏற்றுக்
கொள்வேன்; காணுதி - நீ அதைப் பார்.

     உன்பால் நான்கொண்ட காதலால் என் வெற்றி பழிபெற்றது.
அவர்களைக் கொல்லேன் என்று கூறிய இராவணன் தன் காதலை
விவரிக்கிறான். அமைதி, ஆவியல், என்று பேசப்படுகிறது. பாவை - பதுமை
(விக்கிரகம்) குதலை - இனிய மொழி - கண்டு படு குதலைப் பசுங்கிளி -
(மீனாட்சி தமிழ் 7-1) குதலை - இளமொழி என்று அரும்பதவுரை பேசும்
(சிலம்பு - 30 - 114)                                       (146)