மாண்பிறந்து அமைந்த கற்பின் வாணுதல் நின்பால் வைத்த சேண் பிறந்துஅமைந்த காதல், கண்களின் தெவிட்டி, தீராக் காண்பிறந்தமையால், நீயே, கண் அகன் ஞாலம் தன்னுள், ஆண் பிறந்துஅமைந்த செல்வம் உண்டனையாதி அன்றோ ?
'கற்பிற் சிறந்த ஒருபெண்ணின் உயரிய காதலை அப்பெண் தன் கண்களில் திரட்டி வைத்துக் கொண்டு உன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கும் செல்வம் பெற்ற நீயே உலகில் ஆடவராய்ப் பிறந்தவர் பெற வேண்டிய செல்வத்தை முழுதும் பெற்றவனாக ஆனாய்' என்று அனுமன் இராமனைப் பாராட்டிய இப்பாடல் உயர்ந்த கருத்துடையதாகும். (35-1)