523.

'அயிர்ப்பு இலர், காண்பார்; முன்னும் அறிந்திலர்
                            எனினும், ஐய !-
எயில் புனைஇலங்கை மூதூர் இந்திரன் யாக்கைக்கு
                            ஏற்ற
மயில் புரைஇயலினாரும், மைந்தரும், நாளும் அங்கே
உயிர்ப்பொடும்,உயிரினோடும், ஊசல் நின்று
                           ஆடுவாரும்.'

     இலங்கையில் ஆடவரும்மகளிரும் நுகர்ந்து நிற்கும் தன்மை கூறியது.
                                                   (35-9)