5233.

'வாராது ஒழியான் எனும் வண்மையினால்,
ஓர் ஆயிர கோடிஇடர்க்கு உடையேன்;
தீராய் ஒரு நாள்வலி - சேவகனே !
நாராயணனே ! தனிநாயகனே ! +

(இராமபிரான்)

     வாராது ஒழியான்- இங்கேவாராமல் அமைதி பெறான்; எனும் -
என்கின்ற ; வண்மையினால் - அவன் கருணை மிகுதியால்; ஓர் ஆயிர
கோடி -
பல்கோடியாகப் பெருகிவரும்; இடர்க்கு உடையேன் -
துன்பங்கட்குத் தளராமல் உள்ளேன்; சேவகனே - வீரம் உடையவனே;
நாராயணனே - திருமால் போன்றவனே; தனி நாயகனே - ஒப்பற்ற
தலைவனே; ஒருநாள் - ஒருதினம்; வலி தீராய் - என்னுடைய நோவைத்
தீர்ப்பாயாக.

     அரசர்களைத்திருமாலாகப் பேசுவது மரபு. அது பற்றித் திருமால் என்று
கூறினாள் என்றும் கொள்ளலாம். இதனைப் பூவை நிலை' என்று தமிழ் மரபு
பேசும். வலி - நோவு. 'வலியானே யான்பட்ட வலிகாணவாராயோ' (கம்ப.
2833.) இப்பாடலில் உள்ள 'வலி' அனைவர்க்கும் தீராவலியாக உள்ளது.
ஏகநாயகன், தனி நாயகன் (கடவுள்) 'ஏகநாயகனை இமயவர்க்கு அரசை'
(திருவிசை - சேந்தன் 1-1)                                   (6)