5271.

'அறம் கிளர் பறவையின் அரசன் ஆடு எழில்
பிறங்கு எருத்துஅணைவன பெயரும், பொற்புடை,
மறம் கிளர் மதகரிக் கரமும் நாணின,
குறங்கினுக்குஉவமை, இவ் உலகில் கூடுமோ ?

(ஐயனின் தொடைகள்)

     அறம் - அறத்தைப் போல;கிளர் - கிளர்ச்சி பெற்ற; பறவையின்
அரசன் -
பறவைகளுக்குத் தலைவனான கருடனின்; ஆடுஎழில் - வெற்றியும்
அழகும்; பிறங்கு - விளங்கும்; எருத்து அணைவன - பிடரியை
ஒத்திருப்பன; பெயரும் பொற்புடை - அசையும் அழகுடைய (அதைக்கண்டு);
மறங்கிளர் - வீரம் கிளர் கின்ற; மதகரிக் கரமும் - மதயானைகளின் கைகள்;நாணின - உவமையாகாமல் நாணம் அடைந்தன (என்றால்);
குறங்கினுக்கு -இராமபிரானின் தொடைகளுக்கு; உவமை - ஒப்புமையாகத்
தக்க பொருள்கள்;இவ்வுலகில் கூடுமோ - இந்த உலகத்தில் கிட்டுமா ?

    இறைவனின்வாகனமான கருடனின் கழுத்தே பெருமான் தொடைகட்கு
ஒப்பு. பிற ஒப்பாகா. கருடனின் கிளர்ச்சி தருமத்தின் கிளர்ச்சி போன்றது.
கருடனின் கிளர்ச்சியை வேதாந்த தேசிகர் கருடதண்டகத்தில் பேசினார்.
கவிச்சக்கரவர்த்தி நாகபாசப்படலத்தில் இக்கிளர்ச்சியைப் பேசுவர். (கம்ப. 8244
- 49) குறங்கு - தொடை யானையின் தொடைக்கு உவமையாக்குவது மரபு
பிறங்கு எருத்தில் இருந்து நீங்கி வந்த தொடை என்று பொருள் கூறினர்.
ஆய்க. இஃது தூரகை. வடநூலார் 'தூராந்வயம்' என்பர் 'பிறங்கு எருத்து
அணைவன குறங்கு' என்று கூட்டினர்.                         (44)