பேருரு  அடக்கப்பிராட்டி வேண்டுதல்.

5333.

வஞ்சிஅம்மருங்குல் அம் மறு இல் கற்பினாள்,
கஞ்சமும் புரைவனகழலும் கண்டிலாள்;
'துஞ்சினர்அரக்கர்' என்று உவக்கும் சூழ்ச்சியாள்,
'அஞ்சினென் இவ்உரு; அடக்குவாய்' என்றாள்.

     வஞ்சி அம்மருங்குல் - வஞ்சிக் கொடி போலும்இடையை உடைய;
அ - அந்த; மறு இல் கற்பினாள் - குற்றமற்ற கற்பை உடைய பிராட்டி;
கஞ்சம் புரைவன - தாமரை மலரை ஒத்தனவான; கழலும் - (அனுமனின்)
திருவடிகளையும்; கண்டிலள் - கண்டாள் இல்லை (அவள்); அரக்கர் -
அரக்கர்கள்; துஞ்சினர் - (இவனால்) இறந்தவராவார்; என்று உவக்கும் -
என்று மகிழ்ச்சியடையும்; சூழ்ச்சியாள் - எண்ணத்தை உடையவளாய்;
(அனுமனை நோக்கி) இவ் உரு - இந்த உருவத்தைக் கண்டு; அஞ்சினென் -
அடக்கிக் கொள்க; என்றாள் - என்று கேட்டுக் கொண்டாள்.

     அனுமனின்பேருருவின் மாட்சியை வி்ளக்கக், கழலும் கண்டிலள்
என்றான் கவிச்சக்கரவர்த்தி. கஞ்சமும் என்பதில் உள்ள 'உம்' அசை. கஞ்சம்
புரைவன என்க. களிறு சென்று களன் அகற்றவும் (புறம் 26)         (106)