5339.

'மின் நேர் எயிற்று வல் அரக்கர் வீ்க்கம் நோக்கி,
                                   வீரற்குப்
பின்னேபிறந்தான் அல்லது ஓர் துணை இலாத
                              பிழை நோக்கி,
உன்னாநின்றேஉடைகின்றேன், ஒழிந்தேன் ஐயம்;
                            உயிர் உயிர்த்தேன்;
என்னே ? நிருதர்என் ஆவர், நீயே எம் கோன்
                            துணை என்றால்?

(அனுமன்)

     மின்நேர்எயிற்று - மின்னைப் போலும் பற்களையுடைய; வல்
அரக்கர் -
வலிமை மிக்க அரக்கர்களின்; வீக்கம் நோக்கி - பெருக்கத்தைப்
பார்த்து; வீரற்கு - இராமபிரானுக்கு; பின்னே பிறந்தான் அல்லது - பி்ன்னேதோன்றிய இலக்குவனே அல்லாமல்; ஓர் துணையிலாத - வேறு ஒரு
உதவியாளன் இல்லாத; (பெருமானுக்கு யாதாகுமோ என்று) உன்னா நின்றேன்
-
ஆலோசனை செய்து; உடைகின்றேன் - மனம் உடைந்து போன யான்;
ஐயம் ஒழிந்தேன் - ஐயப்பாடு நீங்கினவள் ஆனேன்; உயிர் உயிர்த்தேன் -உயிர் தழைக்கப் பெற்றேன்; நீயே - சிறப்பின் வடிவமான நீயே; எம்
கோன்துணை என்றால் -
எம் பெருமானின் உதவியாளனாக அமைந்தாய்
என்றால்;நிருதர் என்னாவர் - அரக்கர்கள் என்ன பாடுபடுவார்கள்; என்னே
-
என்னஆச்சரியம்.

     கான் உறைவாழ்க்கை கலந்த இராமன். தலைமகற் பிரிந்த தனிமையன்.
தனாது சுற்றமும் சேண்மையதுவே. முற்றியது. வெண்கோட்டுக் குன்றம் எடுத்த
மீளி வன் தோள் ஆண்டகை ஊரே; அன்றே சொல் முறை மறந்தனம் வாழி
வில்லும் உண்டு அவற்கு அந்நாள் ஆங்கே. என்னும் சங்கராமாயணம் இங்கே
நினைவுக்கு வருகிறது (புறத்திரட்டு 1332) 'தருமத்தின் தனிமை தீர்ப்பான்'
(கம்ப. 3781)
 என்று  முன்பு அனுமன்புகழப் பெற்றான். (அனுமப் படலம் 29)
இங்கு நீயே எம்கோன் துணையானால் என்று பிராட்டி பேசினாள். தருமமே
இராமன் என அறிக. அறத்தின் மூர்த்தி இராமன் என்று கம்பர் உணர்ந்தனர்.
மயங்கலும் மயங்கும் என்று சிலம்பு பேசும் (22-154) உயிர் உயிர்த்தேன்
என்பதும் அது போன்றது. உயிர்த்தேன் என்பதே பொருள். அறிஞர்கள்
சிந்திக்க வேண்டும்.
                                                          (112)