'வாலி இளவல், அவன் மைந்தன், மயிந்தன், துமிந்தன், வயக் குமுதன், நீலன், இடபன்,குமுதாக்கன், பனசன், சரபன், நெடுஞ் சாம்பன், காலன் அனையதுன்மருடன், காம்பன், கவயன், கவயாக்கன், ஞாலம் அறியும்நளன், சங்கன், விந்தன், துவிந்தன், மதன் என்பான்;
வாலி இளவல் -வாலியின்தம்பியாகிய சுக்கிரீவன்; அவன் மைந்தன்- அவனுடைய புதல்வனாகிய அங்கதன்; மயிந்தன் துமிந்தன் - ;வயக்குமுதன் - வெற்றியை உடைய குமுதன்; நீலன் - ; இடபன் - ;குமுதாக்கன் - ; பனசன் - ; சரபன் - ; நெடுஞ்சாம்பன் - நீண்ட ஆயுளையுடைய சாம்பன்; காலன் அனைய - யமனைப் போலும்; துன்மருடன் - ; காம்பன் - ; கவயன் - ; கவயாக்கன் - ; ஞாலம் அறியும் நளன் - உலகத்தாரால் அறியப்பட்ட நளன்; சங்கன் - ; விந்தன் -; துமிந்தன் - ; மதன் என்பான் - மதன் என்று கூறப்படுபவன். வாலியின் தம்பியாகிய சுக்கிரீவன்... மதன் இப்பாடலும் அடுத்த பாடலும்ஒரு தொடர். மயிந்தன் துமிந்தன் இரட்டையர். குமுதன் ஆம்பல் மலர்போலும் நிறமுடையவன். இடபன் - காளை போல்பவன். குமுதாக்கன் -ஆம்பல் போலும் கண்களைப் பெற்றவன். சரபன் - சரபப் பறவைபோன்றவன். நீண்ட ஆயுள் பெற்றவன் ஆகையால் நெடுஞ்சாம்பன் என்றுபேசப்பட்டான். துன் மருடன் - பொறுக்கவொண்ணாச் சீற்றத்தான் கவயன் -காட்டுப் பசுப் போல்பவன். கவயாட்சன் - காட்டுப் பசுவின் கண் பெற்றவன்.சங்கன் - சங்கு போலும்நிறமுடையவன். (116)