5405. | 'மேல் உறஇராவணற்கு அழிந்து வெள்கிய நீல் உறு திசைக்கரி திரிந்து நிற்பன ஆல் உற அனையவன்தலையை வவ்வி, வில் கால் உறு கணைதடிந்து, இடுவ காண்டியால். |
மேல் - முற்காலத்தில்;இராவணற்கு - இராவணனுக்கு; உற அழிந்து - நன்றாகத் தோற்று; வெள்கிய - நாணமுற்றனவும்; திரிந்து நிற்பன - நிலைகுலைந்து நிற்பனவும் (ஆகிய); நீல் உறு திசைக்கரி - நீலநிறமுடைய திக்கு யானைகள்; ஆல்உற - மகிழ்ச்சியடையும்படி; வில்கால்உறுகணை - இராமபிரானுடைய வில்லிலிருந்து காலாக உறுகின்ற அம்புகள்; அனையவன் தலையை - அந்த இராவணனின் தலைகளை;தடிந்து வவ்லி - களைந்து கைப்பற்றி; இடுவ - போடுவதை; காண்டி - பார்ப்பாயாக. ஆல் - அசை.தோற்ற யானைகளின் பாதத்தில் வென்ற இராவணனின் தலை விழும் என்றதுசெருக்கின் முடிவு இப்படித்தான் அமையும் என்று குறிப்பித்தவாறு. திசையானைகளுள் வெண்மை முதலிய பிறநிறம் உடையனவும் உளவேனும் பெரும்பான்மை பற்றி நீல் உறுதிசைக் கரி என்றார் (அண்ணாமலை - பதி) இடுவ, தொழிற்பெயர்த்திரிபு. இடுதல் என்பதே பொருள். பிறவாறு கூறி இடர்ப்பட வேண்டா. தொழிற் பெயர் எச்சமாய் தோன்றல் மரபே (உரைச்சூத்திரம்) (61) |