5410.

'ஈண்டு, ஒரு திங்கள், இவ் இடரி்ன் வைகுதல்
வேண்டுவது அன்று;யான், விரைவின் வீரனைக்
காண்டலே குறை;பினும் காலம் வேண்டுமோ ?
ஆண்தகை இனிஒருபொழுதும் ஆற்றுமோ ?

(தாயே)

     நீ - நீ; ஈண்டு -இந்த இலங்கையில்; ஒரு திங்கள் - ஒரு மாதம்;
இடரின் -
துன்பத்தி்லே; வைகுதல் வேண்டுவது அன்று - தங்கியிருக்க
வேண்டாம்; யான் - நான்; விரைவி்ன் - வேகமாக; வீரனைக் காண்டலே -
இராமபிரானைப் பார்ப்பதுதான்; குறை - எஞ்சியுள்ள செயல்; பி(ன்)னும் -
கண்ட பிறகும்; காலம் வேண்டுமோ - இங்கு வர நல்லகாலம் பார்ப்பானோ
?; ஆண்டகை - ஆடவருள்
 சிறந்த பெருமான்;இனி - இனிமேல்; ஒரு
பொழுதும் -
ஒரு கண நேரமும்; ஆற்றுமோ - பொறுத்திருப்பானோ
(பொறான்);

     கேட்காததே குறை.கேட்டால் யாவும் வழங்குவான் என்று
நாட்டுப்புறத்தில் பேசப்படுவதைக் கேள்விப்படாதவர் யாவர். அங்குள்ள குறை
இங்கு நினைக்கவும். குறை - எஞ்சியிருப்பது. காலம் வேண்டுதல் - நல்ல
காலத்தை அவாவிச் சும்மா இருத்தல். வள்ளுவர் காலம் கருதி இருத்தல்
என்பர். இராமன், பிராட்டி நிலை கேள்வியுற்றதும் விரைந்து வருவான்; காலம்
பாரான் என்று அனுமன் குறித்தனன். காலத் தாழ்ச்சியை மக்கள் 'மேஷ
ரிஷபம்' பார்த்தல் என்பர் ஆண்டகை - ஆடவருள் தகுதி வாய்ந்தவன்.
வடநூலார் புருஷோத்தமன் என்பர். நம்பி என்பதும் அது.           (66)