சோலை அழிந்தவிதம்

கலிவிருத்தம்
(வேறு வகை)

5437. 

முடிந்தன;பிளந்தன; முரிந்தன; நெரிந்த;
மடிந்தன;பொடிந்தன; மறிந்தன; முறிந்த;
இடிந்தன;தகர்ந்தன; எரிந்தன; கரிந்த;
ஒடிந்தன;ஒசிந்தன; உதிர்ந்தன; பிதிர்ந்த.

     முடிந்தன -(அனுமனதுகால்களால் துகைக்கப்பட்ட மரங்களில் சில)
அழிந்து போயின; பிளந்தன - பிளவுபட்டன; முரிந்தன - வளைந்து
விட்டன; நெரிந்த - ஒன்றோடு ஒன்று தாக்கி நொறுங்கி அழிந்தன; மடிந்தன
-
தலைசாய்ந்தன; பொடிந்தன - பொடியாய்ப் போய் விட்டன; மறிந்தன -
கீழ் மேலாகக் கவிழ்ந்தன; முறிந்த - துண்டுகளாகப் போய் விட்டன;
இடிந்தன -
இடிபட்டுப் போயின; தகர்ந்தன - சிதள் சிதளாய்த் தெறித்துப்

போயின; எரிந்தன- நெருப்புப் பற்றி எரிந்து விட்டன; கரிந்த - கருகிப்
போயின; ஒடிந்தன - ஒடிபட்டன; ஒசிந்தன - துவண்டு சாய்ந்தன;
உதிர்ந்தன -
வலியற்று உதிர்வன ஆயின; பிதிர்ந்த - சின்னபின்னப்பட்டன.

     மரங்களின்அழிவு, பல வினைச் சொற்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
                                                           (9)