5453. | வேங்கைசெற்று, மராமரம் வேர் பறித்து, ஓங்கு கற்பகம்பூவொடு ஒடித்து உராய், பாங்கர்சண்பகப் பத்தி பறித்து, அயல் மாங்கனிப் பணைமட்டித்து மாற்றியே; |
வேங்கை செற்று -வேங்கைமரங்களை அழித்து; மரா மரம் வேர்பறித்து - ஆச்சாமரங்களை வேரோடு பிடுங்கி எறிந்து; ஓங்கு கற்பகம் பூவொடு ஒடித்து - உயர்ந்த கற்பக மரங்களை மலர்களுடன் முறித்து; பாங்கர் உராய் சண்பகம் பத்தி பறித்து - பக்கங்களில் உராய்ந்து கொண்டிருந்த சண்பக மரங்களின் வரிசைகளைப் பறித்து எறிந்து; அயல் மாங்கனிப் பணை மட்டித்து மாற்றி - பக்கத்தில் உள்ள மாம்பழங்கள் நிறைந்த கிளைகளை முறித்து நிலை மாறச் செய்து. கற்பக மரங்கள்தெய்வத்தன்மை வாய்ந்தன. அதனால் அவைகள் அழியவில்லை; நிலை மாறின. (25) |