5482.

விட்டனன்,இலங்கைதன்மேல்; விண் உற விரிந்த
                            மாடம்;
பட்டன, பொடிகள்ஆன; பகுத்தன பாங்கு நின்ற;
சுட்டன பொறிகள்வீழத் துளங்கினர், அரக்கர்தாமும்;
கெட்டனர்வீரர், அம்மா !-பிழைப்பரோ கேடு
                            சூழ்ந்தார் ?

     இலங்கை தன்மேல் விட்டனன் - பேர்த்தெடுத்த அம்மண்டபத்தை)
இலங்கை நகர் மீது வீசி எறிந்தான்; (அதனால்) விண் உற விரிந்த மாடம் -
வானத்தை அளாவும்படி பரவியிருந்த மாளிகைகள்; பட்டன பொடிகள் ஆன
-
மோதப் பட்டனவாய்ப் பொடிகளாக உதிர்ந்தன; பாங்கு நின்ற பகுத்தன -
பக்கத்தில் நின்ற கட்டிடங்களும் பிளவுபட்டன; பொறிகள் வீழச் சுட்டன -
நெருப்புப் பொறிகள்  விழுவதனால், பொருள்களையெல்லாம் சுட்டெரித்தன;
வீரர் அரக்கர் தாமும் துளங்கினர் கெட்டனர் -
எதற்கும் கலங்காத
அரக்கரில் உண்மையான வீரர்களும் அழிந்தொழிந்தார்கள்; கேடு சூழ்ந்தார்
பிழைப்பரோ ? -
பிறர்க்குக் கேடு செய்தவர்கள் அந்தத் தீவினைப் பயனை
அனுபவியாது தப்புவார்களோ ? (தப்ப மாட்டார்கள்).

     'கேடு சூழ்ந்தார்பிழைப்பரோ' என்ற பொதுப் பொருளைக் கொண்டு.
'அரக்கர் கெட்டனர்' என்ற சிறப்புப் பொருள் விளக்கப்பட்டது. வேற்றுப்
பொருள் வைப்பணி. அம்மா என்ற இடைச்சொல் இரக்கத்தைச் சுட்டியது. (54)