5495.

வானவர்எறிந்த தெய்வ அடு படை வடுக்கள்,
                                 மற்றைத்
தானவர் துரந்தஏதித் தழும்பொடு தயங்கும் தோளர்;

யானையும்பிடியும் வாரி இடும் பில வாயர்; ஈன்ற
கூனல் வெண்பிறையின் தோன்றும் எயிற்றினர்;
                        கொதிக்கும் கண்ணர்;

     வானவர் எறிந்ததெய்வ அடுபடை வடுக்கள் - தேவர்கள் தம் மீது
வீசி எறிந்த தெய்வத்தன்மை உள்ள, கொல்ல  வல்ல ஆயுதங்களால்
உண்டான தழும்புகள்; மற்றை தானவர் துரந்த ஏதி தழும் பொடு தயங்கும்தோளர் - தேவரின் வேறான அசுரர்கள் போரில் தூண்டிய
ஆயுதங்களால்உண்டான தழும்புகளோடு விளங்குகின்ற தோள்களை
உடையவர்கள்;யானையும் பிடியும் வாரி இடும் பில வாயர் - ஆண்
யானையையும்பெண்யானையையும் வாரி உண்ணுகின்ற குகை போன்ற
வாயினைஉடையவர்கள்; ஈன்ற கூனல் வெண் பிறையின் தோன்றும்
எயிற்றினர் -
புதிதாகத் தோன்றிய வளைந்த வெண்மையான பிறைச் சந்திரன்
போன்றுகாணப்படுகின்ற பற்களை உடையவர்கள்; கொதிக்கும் கண்ணர் -
கோபத்தால் பொங்கும் கண்களை உடையவர்கள்.

     ஏதி - ஆயுதம்;எயிறு - பல்.                              (7)