5509.

'இத இயல்இது' என, முந்தே இயைவுற இனிது
                           தெரிந்தான்;
பத இயல் அறிவுபயந்தால், அதின் நல பயன்  உளது
                           உண்டோ ?
சிதவு இயல் கடிபொழில் ஒன்றே சிதறிய செயல்
                           தரு திண் போர்
உதவு இயல்இனிதின் உவந்தான்,-எவரின்
                           அதிகம் உயர்ந்தான்.

     எவரினும் அதிகம்உயர்ந்தான் - யாவரினும் மிகவும்சிறந்த அனுமன்;முந்தே - முதலில்; இது இதம் இயல் - தான், இந்த
அசோகவனத்தைஅழித்தது நல்ல செயல் என்று; இயைவுற இனிது
தெரிந்தான் -
பொருத்தமாக நன்கு அறிந்து கொண்டான்; பதம் இயல்
அறிவு பயந்தால் -
பக்குவமுடைய அறிவு தோன்றினால்; அதின் நல பயன்
உளது உண்டோ -
அதைக் காட்டிலும் நல்லதான பயன் தரத்தக்கது வேறு
உண்டோ ?(இல்லையென்றபடி); கடிபொழில் சிதைவு இயல் ஒன்றே -
காவலுள்ளஅசோக வனத்தை அழித்ததான செய்கை ஒன்று மட்டுமே; சிதறிய
செயல்தரு திண்போர் உதவு இயல் -
(அரக்கர்) தோற்றோடுகின்ற
செயலைஉண்டாக்கக் கூடிய வலிய போரை உதவி நின்ற தன்மைகண்டு;
இனிதின்உவந்தான் - பெரிதும் மகிழ் வெய்தினான்.

     முதலடியில் கூறப்பெற்ற செய்திக்கு இரண்டாம் அடி காரணமாய்
அமைந்துள்ளது. வேற்றுப் பொருள் வைப்பணி.                    (21)