5521. | உக்க பற்குவை; உக்கன, துவக்கு எலும்பு உதிர்வுற்று; உக்க முற்கரம்;உக்கன, முசுண்டிகள் உடைவுற்று; உக்க சக்கரம்;உக்கன, உடல் திறந்து உயிர்கள்; உக்க கப்பணம்;உக்கன, உயர் மணி மகுடம். |
பல்குவை உக்க -அரக்கர்களது பற்களின் குவியல்கள் சிந்தின; துவக்கு எலும்பு உதிர்வுற்று உக்கன - தோல்களும் எலும்புகளும் சிதறி அழிந்தன; முற்கரம் உக்க - சம்மட்டி என்ற ஆயுதங்கள் சிதறி விழுந்தன; முசுண்டிகள் உடைவுற்று உக்கன - முசுண்டி என்னும் ஆயுதங்களும் ஒடிந்து சிதறின; சக்கரம் உக்க - சக்கரம் என்னும் ஆயுதங்கள் சிதறின; உடல் திறந்து உயிர்கள் உக்கன - உடல்கள் பிளக்கப்பட்டு உயிர்கள் சிந்திப் போயின; கப்பணம் உக்க - அரிகண்டம் என்னும் ஆயுதங்கள் சிதறிப் போயின; உயர் மணி மகுடம் உக்கன - சிறந்த இரத்தின கிரீடங்கள் சிதறிப் போயின. துவக்கு - தோல்;இறுதல் - அற்று நீங்குதல்; தெறித்தல் - சிதறி நீங்குதல்; உகுதல் - சிந்தி நீங்குதல். (33) |