5523. | ஈர்க்க,பட்டனர் சிலர்; சிலர் இடிப்புண்டு பட்டார்; பேர்க்க,பட்டனர் சிலர்; சிலர் பிடியுண்டு பட்டார்; ஆர்க்க,பட்டனர் சிலர்; சிலர் அடியுண்டு பட்டார்; பார்க்க, பட்டனர் சிலர்; சிலர் பயமுண்டு பட்டார். |
சிலர், ஈர்க்கபட்டனர் - சில அரக்கர்கள்,அனுமன் அவர்களைப் பிடித்து இழுத்தலால் இறந்தார்கள்; சிலர் இடி உண்டு பட்டனர் - மற்றும் சிலர்,இடிக்கப்பட்டு இறந்தனர்; சிலர் வேர்க்க பட்டனர்- சிலர், அவ்விடம் விட்டுப் பெயர்த்து எறியப்பட்டு இறந்தனர்; சிலர் பிடிஉண்டு பட்டார் - வேறு சிலர் அனுமனால் பிடிக்கப்பட்டு இறந்தனர்; சிலர்ஆர்க்க பட்டனர் - இன்னும் சிலர் கட்டப்பட்டு இறந்தனர்; சிலர் அடிஉண்டு பட்டார் - மற்றுஞ் சிலர், அனுமனால் அடிக்கப்பட்டு இறந்தனர்;சிலர் பார்க்க பட்டனர் - வேறு சிலர், அனுமன் கோபித்துப் பார்த்ததாலேஇறந்தனர்; சிலர் பயமுண்டு பட்டனர் - வேறு சிலர் பயந்து இறந்தனர். ஆர்த்தல் -கட்டுதல்; 'ஆர்த்த கணவன் அகன்றான்' (சிலப் - 9; 37) (35) |