5530.

தம் தம்மாடங்கள் தம் உடலால் சிலர் தகர்த்தார்;
தம் தம்மாதரைத் தம் கழலால் சிலர் சமைத்தார்;
தம் தம்மாக்களைத் தம் படையால் சிலர் தடிந்தார்;-
எற்றி மாருதிதடக் கைகளால் விசைத்து எறிய.

     மாருதி தடகைகளால் எற்றி விசைத்து எறிய - அனுமன் தனது
பெரிய கைகளினால், அடித்துக் கட்டித்தூக்கி வீசுதலினால்; சிலர் தம்தம்
மாடங்கள் தம் உடலால் தகர்த்தார் -
சில அரக்கர்கள் தங்கள் தங்கள்
வீடுகளை தமது உடம்புகளினால் உடைத்தார்கள்; சிலர், தம் தம் மாதரைத்
தம் கழலால் சமைத்தார் -
சில அரக்கர்கள் தங்கள் தங்கள் மனைவி
மார்களைத் தமது கால்களால் அழித்தார்கள்; சில, தம்தம் மாக்களைத் தம்
படையால் தடித்தார் -
 சில அரக்கர்கள்தங்கள் தங்களது குழந்தைகளைத்
தமது ஆயுதங்களினால் கொன்றார்கள்.

    அந்தஅரக்கர்களின் அழிவு, அவர்களது வீடு, மனைவி, மக்கள்
அழிவதற்கு உடன் காரணமாயிற்று என்பதாம்.                     (42)