5531.

ஆடல் மாக்களிறு அனையவன், அரக்கியர்க்கு
                           அருளி,
'வீடு நோக்கியேசெல்க' என்று, சிலவரை விட்டான்;
கூடினார்க்கு அவர்உயிர் எனச் சிலவரைக்
                           கொடுத்தான்;
ஊடினார்க்கு அவர்மனைதொறும் சிலவரை
                           உய்த்தான்.

     ஆடல் மா களிறுஅனையவன் - பகைவரைக் கொல்லும்
வலிமைபொருந்திய பெரிய ஆண் யானை போன்ற அனுமன்; அரக்கியர்க்கு
அருளி -
அரக்கியர் சிலர் படுகின்ற துன்பத்தைக் கண்டு அவர்கள் மேல்
கருணை கொண்டு; சிலரை வீடு நோக்கியே செல்க என்று விட்டான் - சிலஅரக்கரை 'உங்கள் வீடு நோக்கிச் செல்லுங்கள்' என்று கொல்லாது
விட்டான்;சிலவரை, கூடினார்க்கு அவர் உயிர் என கொடுத்தான் - சில
அரக்கரை,அப்போதுதான் சேர்ந்தவராகிய இளம் பெண்களுக்கு உயிர்
போன்றுஇருப்பவர் என்று, கொல்லாது விடுத்தான்; ஊடினார்க்கு - ஊடல்
கொண்டமகளிர்களுக்கு, இரங்கி; அவர் மனை தொறும் சிலவரை
உய்த்தான் -
அவர் வீடு தோறும் அவர்களது கணவர் போய்ச் சேருமாறு
அவர்களைஅனுப்பி விட்டான்.

     இதனால்,அனுமனுக்கு வீரத்தோடு ஈரமும் (இரக்கம்) இருந்தது என்பது
புலப் படுகின்றது.                                            (43)