5539.

கார்க் கருந் தடங் கடல்களும், மழை முகில்
                                கணனும்,
வேர்க்க, வெஞ்செரு விளைத்து எழும் வெள்
                               எயிற்று அரக்கர்
போர்க் குழாம்படி பூசலின், ஐயனைப் புகழ்வுற்று
ஆர்க்கும்விண்ணவர் அமலையே, உயர்ந்தது, அன்று
                               அமரில்.

     கார் கரும் தடங்கடல்களும் - மிகக் கரிய பெரியகடல்களும்; மழைமுகில் கணனும் - மழையைத் தருகின்ற மேகக் கூட்டங்களும்;
வேர்க்க -
மனம் புழுங்கும்படி (பின்னடையும் படி); வெம் செரு விளைத்து
எழும் -
கொடும் போரை உண்டாக்கி மேற் கொண்டு பற்களை உடைய
அரக்கர்களின்போர்க்கூட்டங்களில்; படி பூசலின் - தோன்றுகின்ற ஒலியை
விட;விண்ணவர் - தேவர்கள்;
ஐயனைப் புகழ் வுற்று -பெரியோனான
அனுமனைக் கொண்டாடி; ஆர்க்கும் அமலையே - (மகிழ்ச்சியால்)
ஆரவாரிக்கின்ற 'ஒலியே; அன்று அமரில் உயர்ந்தது - அன்றைய போரில்
அதிகமாயிருந்தது.

     அனுமனதுபோர்த்திறனையும் வீரத்தையும் தேவர்கள் கண்டு
புகழ்ந்தனர். அந்த மகிழ்ச்சியில் எழுந்த ஒலி, அரக்கர்களின் போர் ஒலியை
விஞ்சி நின்றது என்க.                                      (51)