5542. | எஞ்சல்இல் கணக்கு அறிந்திலம்; இராவணன் ஏவ, நஞ்சம்உண்டவராம் என அனுமன்மேல் நடந்தார்; துஞ்சினார் அல்லது யாவரும் மறத்தொடும் தொலைவுற்று, எஞ்சினார்இல்லை; அரக்கரின் வீரர் மற்று யாரே ? |
இராவணன் ஏவ -இராவணன்கட்டளை இட்டு அனுப்ப; நஞ்சம் உண்டவராம் என அனுமன் மேல் நடந்தார் - விடத்தை அருந்தியவர்கள் போன்று அனுமன் மீது போருக்குச் சென்ற அந்த அரக்கர்களின்; எஞ்சல் இல் கணக்கு அறிந்திலம் - குறைவு படாத கணக்கு இவ்வளவு என்று யாம் அறிந்தோம் இல்லை; யாவரும் துஞ்சினார் அல்லது - (ஆனால்) எல்லா அரக்கரும் (எதிர்த்துப் போர் செய்து) இறந்தார்களே அல்லாமல்; மறத்தொடும்தொலைவுற்று எஞ்சினார் இல்லை - வீரத்தில் குறைந்து தோற்றமையால்எஞ்சியவர்கள் எவரும் இல்லை; அரக்கரில் வீரர் மற்றுயாரே ? -(ஆதலால்) அந்த அரக்கர்களைப் போலச் சிறந்த போர் வீரர்கள் வேறு யாரேஉளர் ? (ஒருவரும் இல்லை). அனுமன் மீதுபோருக்குச் சென்ற அரக்கர்களின் வீரத்தைக் கவிஞர் பாராட்டுவதாக அமைந்தது இக்கவிதை. (54) |