5553.

உரும் ஒத்தமுழக்கின், செங் கண், வெள் எயிற்று
                              ஓடை நெற்றிப்
பருமித்தகிரியின் தோன்றும், வேழமும் - பதுமத்து,
                             அண்ணல்
நிருமித்த எழிலிமுற்றிற்று என்னலாம் நிலைய, நேமி,
சொரி முத்தமாலை சூழும், துகி்ற்கொடி, தடந்
                             தேர்-சுற்ற;

     உரும் ஒத்தமுழக்கின் - இடி போன்றபிளிறலையும்; செங்கண்,
வெள்எயிறு -
சிவந்த கண்களையும் வெண்மையான தந்தங்களையும்; ஓடை
நெற்றி -
முகபடாம் அணிந்த நெற்றியையும் உடைய; கிரியின் தோன்றும் -
மலைபோலத் தோன்றுகின்ற; பருமித்த வேழமும் - பெருமிதம் கொண்ட
யானைகளும்; பதுமத்து அண்ணல் நிருமித்த - தாமரை மலரில் வாழ்கின்ற
பிரம்மதேவன் படைத்த; எழிலி முற்றிற்று என்னல் ஆம் நிலைய -
மேகங்கள் ஒருங்கே முடிவாக வந்துள்ளன என்று சொல்லத்தக்க
நிலைமையையும்; நேமி - சக்கரங்களையும்; சொரி  முத்த மாலை சூழும்
துகில் கொடி -
சொரிகின்ற முத்துமாலைகள் சூழப் பெற்ற வெண்ணிறத் துகில்
கொடிகளையும் உடைய; தடம் தேர் சுற்ற - பெரிய தேர்களும் தன்னைச்
சூழ்ந்து வரவும்.

     'குழுவ' என அடுத்தகவியோடு தொடரும் குளகச் செய்யுள். இது முதல்
ஆறு கவிகள் ஒரு தொடர்.

      முழக்கினையும்,செய்கண்ணையும், வெள்ளெயிற்றினையும், நெற்றியினையும் உடைய வேழம். நிலைய தேர், நேமித் தேர், கொடித் தேர்,
தடந்தேர் எனத் தனித்தனி கூட்ட வேண்டும்.                      (4)