5558.

மின் நகுகிரிகள் யாவும் மேருவின் விளங்கித்
                                  தோன்ற,
தொல் நகர்பிறவும் எல்லாம் பொலிந்தன, துறக்கம்
                                  என்ன-
அன்னவன் சேனைசெல்ல, ஆர்கலி இலங்கை ஆய
பொன் நகர்தகர்ந்து, பொங்கி ஆர்த்து எழு தூளி
                                  போர்ப்ப.

     அன்னவன்சேனை செல்ல - அந்தச் சம்புமாலியினது படைகள்
செல்வதால்; ஆர்கலி இலங்கை - கடலால் சூழப்பட்ட இலங்கை; ஆய
பொன் நகர் -
என்ற பொன்னால் அமைந்த நகரமானது; தகர்ந்து, பொங்கி,
-
உடை பட்டு, மிகவும் நிறைந்து; ஆர்த்து எழு தூளி போர்ப்ப -
கிளம்புகின்ற புழுதி, (தம் மீது) படிதலால்; மின் நகு கிரிகள் யாவும் - ஒளி
விளங்குகின்ற சாதாரண மலைகளெல்லாம்; மேருவின் விளங்கி தோன்ற -
பொன்மயமான மேரு மலை போலப் பேரொளி கொண்டு விளங்க; தொல்
நகர், பிறவும் எல்லாம் -
பழைய அந்த இலங்கை நகரும் மற்றைய
நகரங்களும்; துறக்கம் என்னப் பொலிந்தன  - பொன்னுலகமான
சுவர்க்கலோகம் போல விளங்கின.

     நகுதல் -விளங்குதல். உரும் ஒத்த' என்ற பாடல் முதல் இதுவரை வந்த
வினையெச்சங்கள் இச்செய்யுளில் வரும் 'பொலிந்தன' என்ற வினைமுற்றைக்
கொண்டு முடிந்தன.                                           (9)