தேர்ப் படையினர் 5560. | வில் மறைக் கிழவர்; நானா விஞ்சையர்; வரத்தின் மிக்கார்; வன் மறக்கண்ணர்; ஆற்றல் வரம்பு இலா வயிரத் தோளார்; தொல் மறக்குலத்தர்; தூணி தூக்கிய புறத்தர்; மார்பின் கல் மறைத்துஒளிரும் செம் பொன் கவசத்தர்-கடுந் தேர் ஆட்கள். |
கடுந்தேர்ஆட்கள் - விரைந்து செல்லும்தேர் வீரர்கள்; வீல் மறைக் கிழவர் - தனுர் வேதத்துக்கு உரியவர்கள்; நானா விஞ்சையர் - பல விதமான மாய வித்தையில் வல்லவர்கள்; வரத்தின் மிக்கார் - பெற்றவரங்களால் சிறந்தவர்கள்; வன் மற கண்ணர் - வலிய வீரத்தைக் காட்டும் கண்களை உடையவர்கள்; வரம்பு இலா ஆற்றல் வயிரத் தோளார் - எல்லையற்ற வலிமை வாய்ந்த உறுதியான தோள்களை உடையவர்கள்; தொல் மறக் குலத்தார் - பழமையான வீரக் குடியில் பிறந்தவர்கள்; தூணி தூக்கிய புறத்தர் - அம்பறாத் தூணிகட்டிய முதுகை உடையவர்கள்; மார்பின்கல் மறைத்து ஒளிரும் - மார்பாகிய மலையை மறைத்து விளங்குகின்ற; செம் பொன் கவசத்தர் - சிவந்த பொன்னாலான கவசங்களைப் பூண்டவர்கள். கிழமை - உரிமை.இது தேர் வீரர் திறம் கூறியது. (11) |