அனுமனை அணுக முடியாதஅரக்கர் தவிப்பு

5568. 

அவ் வழி,அரக்கர் எல்லாம், அலை நெடுங் கடலின்
                         ஆர்த்தார்;
செவ் வழிச்சேறல் ஆற்றார், பிணப் பெருங் குன்றம்
                         தெற்றி,
வெவ் வழி குருதிவெள்ளம் புடை மிடைந்து உயர்ந்து
                         வீங்க,
'எவ் வழிச்சேறும்' என்றார்; தமர் உடம்பு இடறி
                         வீழ்வார்.

     அவ்வழி -அப்போது;அரக்கர் எல்லாம் - போருக்குச் சென்ற
அரக்கர்கள் யாவரும்; அலை நெடும் கடலின் ஆர்த்தார் - அலைகளை
உடைய பெரிய கடல் போல ஆரவாரித்து; பிணப் பெருங்குன்றம் தெற்றி -
பெரிய பிணமலைகள் கிடந்து போகவொட்டாது தடுத்தலாலும்; வெவ் வழி
குருதி வெள்ளம் புடை
மிடைந்து உயர்ந்துவீங்க - வெம்மையுடனே
பெருகுகின்ற இரத்தப் பெருக்கு(போகும் இடங்களி்ல் எல்லாம்) நெருங்கி
மிக்குப் பெருகுவதாலும்; தமர்உடம்பு இடறி வீழ்வார் - தமது
சுற்றத்தவர்களுடைய பிணங்களின் மேல்இடறி வீழ்கின்றவராய்; செவ் வழி
சேறல் ஆற்றார் -
(அனுமன் உள்ளஇடத்துக்கு) நேரான வழியில் செல்ல
முடியாதவர்களாய்; எவ்வழிச் சேறும்என்றார் - எந்த வழியாகப் போய்ச்
சேருவோம் என்று செல்லும் வழிதெரியாது திகைத்து நின்றார்கள்.


     
செவ்வழி - நேர் வழி;தெற்றுதல் -தடுத்தல்.                 (19)