5573.

இருந்தனன்,எழுந்தனன், இழிந்தனன், உயர்ந்தான்,
திரிந்தனன்,புரிந்தனன், என நனி தெரியார்;
விரிந்தவர்,குவிந்தவர், விலங்கினர், கலந்தார்,
பொருந்தினர்,நெருங்கினர், களம் படப் புடைத்தான்.

     இருந்தனன்எழுந்தனன் இழிந்தனன் உயர்ந்தான் - தோரணத்தில்
மீது அமர்ந்திருந்த அனுமன், எழுந்து, கீழ் இறங்கி, நிமிர்ந்தவனாகி; என நனி
தெரியார் -
என்று நன்றாகத் தெரிந்து கொள்ளாதவராய்; விரிந்தவர் - பரவி
நின்றவர்களும்; குவிந்தவர் - ஒருங்கு சேர்ந்திருந்தவர்களும்; விலங்கினர்
கலந்தார் -
விலகிச் சென்றவர்களும், ஒன்று படக் கலந்து கொண்டவர்களும்;
பொருந்தினர் நெருங்கினர் - போர்க்களத்தில் பொருந்தியிருந்தவர்களும்,
நெருங்கி நின்றவர்களும்; களம்படப் புடைத்தான் - போர்க்களத்தில்
அழிந்து போக, அந்த எழுவால் ஒரு சேர அடித்துக் கொன்றான்.

     அனுமன் எப்படிச்செயல்படுகிறான் என்பதைக்கூட அரக்கரால் அறிய
முடியவில்லை; அவ்வளவு வேகமாக அவன் செயல்பட்டான்.
 என்ன
நடக்கிறதுஎன்பதை அரக்கர் சேனை அறியுமுன்னே அனுமன்
அவர்களை அழித்தான். இருந்தவன் (அனுமன்) எழுந்து, இழிந்து, உயர்ந்து,
திரிந்து போர் செய்தான்; அவன் செயலை அறியாத அரக்க வீரர்களை
எழுவால் அடித்துக் கொன்றான். இருந்தனன். வினையாலணையும் பெயர்.
எழுந்தனன் இழிந்தனன் உயர்ந்தான் திரிந்தனன் - முற்றெச்சங்கள்.      (24)