5575. | இழந்தனநெடுங் கொடி; இழந்தன இருங் கோடு; இழந்தன நெடுங்கரம்; இழந்தன வியன் தாள்; இழந்தன முழங்குஒலி; இழந்தன மதம் பாடு; இழந்தன பெருங்கதம்-இருங் கவுள் யானை. |
இருங்கவுள் யானை- (அனுமனால் அடிக்கப்பட்ட) மதம் பெருகும் கன்னத்தை உடைய யானைகள்; நெடுங் கொடி இழந்தன - (தம் மேல் பிடிக்கப்பட்ட) பெரிய கொடிகளை இழந்தன;இருங்கோடு இழந்தன - பெரிய தந்தங்களை இழந்தன;நெடும் கரம் இழந்தன - பெரிய துதிக்கைகளை இழந்தன; வியன்தாள்இழந்தன - பெரிய கால்களை இழந்தன; முழங்கு ஒலி இழந்தன -வீறிடுகின்ற ஒலியை இழந்தன; மதம் பாடு இழந்தன - மதம் ஒழுகுதலைஇழந்தன; பெருங் கதம் இழந்தன - பெரிய கோபத்தை இழந்தன. அனுமனால் யானைப்படைகள் அழிந்தமை கூறப்பட்டது. யானையின் மீது கொடி எடுத்தல் மரபு. கோபத்தைக் காட்ட முடியாதபடி யானைகள் இறந்தன என்பதை பெருங்கதம் இழந்தன என்று குறித்தார். உயிர் இருந்தால்தானே உணர்ச்சியைக் காட்ட முடியும் ? (26) |