5604.

'அன்றியும், உனக்கு ஆள் இன்மை தோன்றுமால்,
                                அரச !
வென்றி இல்லவர்மெல்லியோர்தமைச் செல விட்டாய்;
நன்றி இன்றுஒன்று காண்டியேல், எமைச் செல
                                நயத்தி'
என்று, கைதொழுதுஇறைஞ்சினர்; அரக்கனும்
                                இசைந்தான்.

     அரச ! - அரசனே !;  அன்றியும் - இவை அல்லாமலும்; உனக்கு
ஆள் இன்மை தோன்றும் -
உனக்கு ஏவற்பணி செய்யும் வீரர்கள்
இல்லாமை விளங்கும்; வென்றி இல்லவர் மெல்லியோர் தமைச்
செலவிட்டாய் -
(முன்பெல்லாம்) வெற்றி பெறத் தகாதவர்களையும்,
வலிமையிற் குறைந்தவர்களையும் (அனுமன் மேல் போருக்குச்) செல்லும்படி
ஏவினாய்; இன்று ஒன்று நன்றி காண்டியேல் - இன்று ஒரு நற்செயலை நீ
காணவிரும்புவாயானால்; எமைச் செல நயத்தி என்று - எங்களைப்
போருக்குச் செலுத்த விரும்புவாய் என்று சொல்லி; கை தொழுது
இறைஞ்
சினர் - (சேனாபதிகள்)கைகளால் கும்பிட்டு வணங்கினர்; அரக்கனும்
இசைந்தான் -
இராவணனும் அதற்கு உடன்பட்டான்.

    தமக்கு முன்அனுமனோடு போர் செய்யச் சென்றோர் வலிமை
குறைந்தவர்கள் என்றும் தாங்களே அனுமனை எதிர்த்த பொழுது வெல்ல
வல்லவர்கள் என்றும் பஞ்சசேனாபதிகள் கூறுகின்றனர்.               (4)