5609.

ஆறு செய்தனஆனையின் மதங்கள்; அவ் ஆற்றைச்
சேறு செய்தனதேர்களின் சில்லி; அச் சேற்றை
நீறு செய்தனபுரவியின் குரம்; மற்று அந் நீற்றை
வீறு செய்தன,அப் பரிக் கலின மா விலாழி.

     ஆனையின்மதங்கள் ஆறு செய்தன - (போருக்குச் சென்ற)
யானைகளின் மதப் பெருக்குகள் (சென்ற இடங்களில்) ஆறுகளை
உண்டாக்கின; அவ் ஆற்றை - அந்த மதநீர் ஆற்றை; தேர்களின் சில்லி
சேறு செய்தன -
தேர்களின் சக்கரங்கள் (ஓடிச்) சேறாகக் குழப்பி விட்டன;
அச் சேற்றை - அவ்வாறு உண்டாகிய சேற்றை; புரவியின் குரம் நீறு
செய்தன -
குதிரைகளின் குளம்புகள் மிதித்துப் புழுதியாகச் செய்தன; அந்
நீற்றை -
அந்தப் புழுதியை; அப் பரிக் கலின மா விலாழி - அந்தக்
குதிரைகளின் கடிவாளம் பூண்ட வாயிலிருந்து வழிகின்ற நுரைகள்; வீறு
செய்தன -
வேறு வேறாய்ப் பிளவுபடச் செய்தன.

      வாய்நுரை - உயர்வு நவிற்சி; இவ்வருணனை பாக்களில் மிகுதி.    (9)