அரக்கர் படையைஅனுமன் காணுதல் 

5625.

இவ் வகைஅனைவரும் எழுந்த தானையர்,
மொய் கிளர்தோரணம் அதனை முற்றினார்;
கையொடு கை உறஅணியும் கட்டினார்;
ஐயனும்,அவர்நிலை, அமைய நோக்கினான்.

     இவ்வகை அனைவரும்- இவ்வாறாக அந்தப் படைத் தலைவர்
ஐவரும்; எழுந்த தானையர் - மேல் நோக்கி எழுந்த சேனையை
உடையவராய்; மொய்கிளர் தோரணம் அதனை முற்றினார் - வலிமையால்
விளங்கும் தோரண வாயிலைச் சூழ்ந்து கொண்டு; கையொடு கை உற - ஒரு
பக்கத்தோடு மற்றொரு பக்கமும் பொருந்த; அணியும் கட்டினார் -
சேனைகளை அணிவகுத்து அமைத்தனர்; ஐயனும் அவர் நிலை அமைய
நோக்கினான் -
அனுமனும் அவர்களது போர் நிலையை நன்றாகப்
பார்த்தான்.                                                 (25)