5627.

 'இற்றனர்அரக்கர் இப் பகலுளே' எனா,
கற்று உணர்மாருதி களிக்கும் சிந்தையான்,
முற்றுறச் சுலாவியமுடிவு இல் தானையைச்
சுற்றுற நோக்கி,தன் தோளை நோக்கினான்.

     கற்று உணர்மாருதி - (பல நூல்களையும்) கற்றுத் தேர்ந்த அனுமான்;
அரக்கர் இப் பகலுனே இற்றனர் எனா, களிக்கும் சிந்தையான் -
இந்த
அரக்கர்கள், இன்று ஒரு பகல் பொழுதுக்குள்ளே அழிவது உறுதி என்று
எண்ணி மகிழ்கின்ற மனத்தினனாய்; முற்று உறச் சுலாவிய முடிவு இல்
தானையை -
(தன்னை) முழுவதும் சூழ்ந்து கொண்ட எல்லையற்ற
அரக்கர்படைகளை; சுற்று உற நோக்கி - நான்கு பக்கத்திலும் நன்றாகப்
பார்த்து; தன் தோளை நோக்கினான் - தனது தோள்களையும் பார்த்தான்.
                                                          (27)