5631. | எறிந்தனர், எய்தனர், எண் இறந்தன பொறிந்து எழுபடைக்கலம், அரக்கர் போக்கினார்; செறிந்தனமயிர்ப்புறம்; தினவு தீர்வுறச் சொறிந்தனர் எனஇருந்து, ஐயன் தூங்கினான். |
அரக்கர் -அந்த அரக்கப் படை வீரர்கள்; பொறிந்து எழு எண் இறந்தன படைக்கலம் - அனற் பொறிகளை விட்டுக் கொண்டு மேற் கிளம்பும் கணக்கற்ற ஆயுதங்களை; எறிந்தனர் எய்தினர் போக்கினார் - எறிந்தும் எய்தும் அனுமன் மீது செலுத்தினர்; மயிர்ப் புறம் செறிந்தன - (அவை அனுமன் மீதுள்ள) அடர்ந்த மயிர்களின் மீது நெருங்கியனவாய்; தினவு தீர்வுறச் சொறிந்தன என - அனுமனுக்கு உண்டான உடல் தினவைப் போக்கச் சொறிந்தன போல இருக்க; இருந்து - இனிதிருந்து; ஐயன் தூங்கினான் - அனுமான் கண்ணுறங்குபவன் போல (ஆனந்தத்தினால்) கண்மூடிக் கொண்டிருந்தான். (31) |