5868..

' "இங்கு ஒரு திங்களே இருப்பல் யான்" என,
அம் கண்நாயகன்தனது ஆணை கூறிய
மங்கையும் இன்உயிர் துறத்தல் வாய்மையால்-
பொங்கு வெஞ்செருவிடைப் பொழுது போக்கினால்.

     பொங்கு வெம்செருவிடை பொழுது போக்கினால் - மிகக் கொடிய
போரிலே நான் தலையிட்டுக் காலத்தை இங்குக்
 கழித்துக்கொண்டிருந்தால்;
இங்கு ஒரு திங்களே யான் இருப்பல் -
'இந்த இலங்கையில் இன்னும் ஒரு
மாத கால அளவே நான் உயிர் வைத்துக் கொண்டிருப்பேன் என்று; அம்
கண் நாயகன் தனது ஆணை கூறிய -
அழகிய திருக்கண்களை உடைய
தனது கணவனான இராமபிரான் மீது ஆணை வைத்துச் சொன்ன; மங்கையும்
மன் உயிர்துறத்தல் வாய்மை ஆல் -
சீதா பிராட்டியும், (தன்னை மீட்க
இராமபிரான் வராமை கண்டு) தன்னிடம் பொருந்திய உயிரைத் துறந்து விடுதல்
உறுதியாகும்.

     'தன் நாயகன்மேல் ஆணையிட்டுக் கூறியதால், பிராட்டி மன உயிர்
துறத்தல் வாய்மையால், என்று அனுமன் நினைத்தான் என்க,          (64)