5635. | இரண்டுதேர் இரண்டு கைத்தலத்தும் ஏந்தி, வேறு இரண்டு மால்யானை பட்டு உருள, எற்றுமால்; இரண்டு மால்யானை கை இரண்டின் ஏந்தி, வேறு இரண்டு பாலினும்வரும் பரியை எற்றுமால். |
இரண்டு தேர்இரண்டு கைத் தலத்தும் ஏந்தி - இரண்டு தேர்களைத்தன்னிரு கைகளில் எடுத்து; வேறு இரண்டு மால் யானைபட்டு உருளஎற்றும் - (எதிர்வந்தது) வேறே இரண்டு பெரிய யானைகள் அழிந்து உருளுமாறு தாக்கினான்; கை இரண்டின் இரண்டு மால் யானை ஏந்தி - தன் இரு கைகளிலும் வேறு இரண்டு பெரியயானைகளை எடுத்து; இரண்டு பாலினும் வேறு வரும் பரியை எற்றும் - இரு பக்கங்களிலும் வேறு வந்த குதிரைகளை மோதி அடித்தான். தன்னை எதிர்க்கவந்த தேர்கள் முதலியவற்றைக் கொண்டே, பகைவரின் யானைகள் முதலியவற்றை அழித்து ஒழித்தான் அனுமன் என்பதாம். (35) |