5636. | மா இரு நெடுவரை வாங்கி, மண்ணில் இட்டு, ஆயிரம் தேர் படிஅரைக்குமால்; அழித்து, ஆயிரம் களிற்றைஓர் மரத்தினால் அடித்து, 'ஏ' எனும்மாத்திரத்து எற்றி முற்றுமால். |
மா இரு நெடுவரைவாங்கி - (மேலும் அனுமன்)பக்கத்தே உள்ள மிகப் பெரிய மலையை எடுத்து; (அதனைக் கொண்டு) ஆயிரம் தேர் பட மண்ணில் இட்டு அழித்து அரைக்கும் - ஆயிரந் தேர்கள் அழியும்படி, அவைகளைத் தரையில் வைத்து அரைப்பான்; ஏ எனும் மாத்திரத்து - இரண்டு மாத்திரைப் பொழுதிற்குள்; ஓர் மரத்தினால் - ஒரு மரத்தைக் கொண்டு; ஆயிரம் களிற்றை அடித்து எற்றி முற்றும் - ஆயிர யானைகளைஅடித்து (அவற்றை) மாயச் செய்வான். 'ஏ' யெனும் அளவுஇரண்டு, மாத்திரை நேரம்; கண் இமைக்கும் நேரம் ஒரு மாத்திரை. 'ஏ' நெடிலெழுத்து; ஆகையால் இரண்டு மாத்திரை (36) |