படைகள் முழுமையாகஅழிதல்

5646.

முழு முதல்,கண்ணுதல், முருகன் தாதை, கைம்
மழு எனப்பொலிந்து ஒளிர் வயிர வான் தனி
எழுவினின்,பொலங் கழல் அரக்கர் ஈண்டிய
குழுவினை, களம்படக் கொன்று நீக்கினான்.

     முழு முதல்கண்ணுதல் முருகன் தாதை - மும் மூர்த்திகளில்
சேர்ந்தவனாகிய, கண்ணை நெற்றியிலே கொண்ட, முருகக் கடவுளின்
தந்தையாகிய சிவபிரானது; கை மழு என - கையில் ஏந்திய மழுவாயுதம்
போல; பொலிந்து ஒளிர் - மிக்கு விளங்குகின்ற; வயிர வான் தனி எழு
வினின் -
உறுதியான் சிறந்த ஒப்பற்ற இரும்புத் தூணினால்; பொலன் கழல்
அரக்கர் ஈண்டிய குழு வினை -
அழகிய வீரக்கழல் அணிந்த
அரக்கருடைய நெருங்கிய கூட்டத்தை; களம் படக் கொன்று நீக்கினான் -
போர்க் களத்தில் இறந்த விழுமாறு கொன்று தொலைத்தான்.  (46)