5650. | உற்று உறுதேர் சிதையாமுன் உயர்ந்தான், முற்றின வீரனை,வானில் முனிந்தான்; பொன் திரள்நீள் எழு ஒன்று பொறுத்தான், எற்றினன்; அஃதுஅவன் வில்லினில் ஏற்றான். |
உற்று உறு தேர்சிதையா முன் - (பொறி) பொருந்தியஅத்தேர் அழிவதற்கு முன்னமே; உயர்ந்தான் - அவரக்கன் அத்தேரினின்றும் உயர்ந்து எழுந்தான்; முற்றின வீரனை - அவன் அங்கும் தன்னை மேலெழாதபடி முற்றிக் கொண்ட வீரனாகிய அனுமனை; வானில் முனிந்தான் - ஆகாயத்திலிருந்தபடியே எதிர்த்தான்; பொன்திரள் நீள் மழு ஒன்று பொறுத்தான் - (அவனை) அனுமன், கரும் பொன்னால் திரட்டப்பட்ட நீண்ட மழு ஒன்றை தாங்கியவனாய்; எற்றினன் - தாக்கியடித்தான்; அஃது - அந்த இரும்புத் தூணை; அவன் வில்லினின் ஏற்றான் - அந்த அரக்கன் தனது வில்லினால் தன் மேல் விழாதபடி தாங்கித் தடுத்தான். (50) |