5653.

ஆயிடைவீரனும், உள்ளம் அழன்றான்;
மாய அரக்கர்வலத்தை உணர்ந்தான்;
மீ எரி உய்ப்பதுஓர் கல் செலவிட்டான்;
தீயவர் அச்சிலையைப் பொடிசெய்தார்.

     ஆயிடை - அப்பொழுது;வீரனும் உள்ளம் அழன்றான் - வீரனான
அனுமனும் மனம் கொதித்தவனாகி; மாய அரக்கர் வலத்தை உணர்ந்தான் -
வஞ்சனையை உடைய அரக்கரது வலிமையை அறிந்து; மீ எரி உய்ப்பது ஓர்
கல் செலவிட்டான் -
மேலே நெருப்பை உமிழ்வதான ஒரு கற்பாறையை
எடுத்து (அவர்கள் மீது) தாக்குமாறு வீசி எறிந்தான்; தீயவர் - தீயவர்களாகிய
அந்த அரக்கர் நால்வரும்; அச்சிலையை பொடி
செய்தார் - அந்த
கற்பாறையை,(தங்கள் ஆயுதங்களால்) பொடியாக உதிரச் செய்தார்கள்.

     எறியப்பட்டமலையின் வேகத்தால் அதிலிருந்து நெருப்புப் பொறி
உண்டாயிற்று.                                               (53)