5657. | மூண்டசினத்தவர் மூவர் முனிந்தார்; தூண்டிய தேரர்,சரங்கள் துரந்தார்; வேண்டிய வெஞ்சமம் வேறு விளைப்பார், 'யாண்டு இனிஏகுதி ?' என்று, எதிர் சென்றார். |
மூவர் மூண்டசினத்தவர் முனிந்தார் - மீதியிருந்த மூவர்மிகுந்த கோபம் உள்ளவர்களாய் (அனுமனிடம்) வெறுப்புற்ற வராகி; தூண்டிய தேரர் - தமது தேர்களைச் செலுத்தியவர்களாய்; சரங்கள் துரந்தார் - (அனுமம் மீது) அம்புகளைத் தொடுத்தனர்; வேண்டிய வெஞ்சமம் வேறு விளைப்பார் - (அவர்கள் மேலும்) தாம் விரும்பிய கொடிய போரை வேறு விதங்களிலும் செய்யத் தொடங்கியவராய்; யாண்டு இனி ஏகுதி ? - இனி நீ எங்குத் தப்பிப் போவாய் ?; என்ற எதிர் சென்றார் - என்று சொல்லிக் கொண்டே அனுமன் முன் எதிர்த்துச் சென்றார்கள். (57) |