5674.

ஏறினன்என்ப மன்னோ, இந்திரன் இகலின் இட்ட,
நூறொடு நூறு பூண்டநொறில் வயப் புரவி நோன்
                           தேர்;
கூறினர் அரக்கர்ஆசி; குமுறின முரசக் கொண்மூ;
ஊறின உரவுத்தானை, ஊழி பேர் கடலை ஒப்ப.

     இந்திரன்இகலின் இட்ட - இந்திரன் போரில்தோற்றுக் கைவிட்டுப்
போன; நொறில் வய - விரைவுள்ளனவும் வெற்றி தரக் கூடியனவுமான;
நூறொடு நூறு புரவி -
இரு நூறு குதிரைகள்; பூண்ட நோன் தேர் ஏறினன்- பூட்டப் பெற்ற வலிய தேரின் மீது ஏறினான்; அரக்கர் ஆசி
கூறினர் -
அரக்கர்கள் (அவனுக்கு) வாழ்த்துக் கூறினார்கள்; முரசக்
கொண்மூ குமுறின-
முரசங்களாகிய மேகங்கள் முழங்கின; ஊழி போர்
கடலை ஒப்ப -
யுகமுடிவுக் காலத்தில் நிலை பெயர்ந்து (பொங்கி) வரும்
கடலைப் போல; உரவுத்தானை ஊறின - வலிய சேனைகள் மேன்மேலும்
அதிகமாகத் தொடர்ந்தன.

     நொறில் -விரைவு; நோன் - வலிமை; கொண்மூ - மேகம்.       (7)