4989.

நீலமேமுதல் நல்மணி நித்திலம்;
மேல கீழ,பல்வேறு ஒளி வீசலால்
பாலின்வேலைமுதல்பல வேலையும்
கால் கலந்தனவோ? என, காட்டுமே.

(அவ்வகழி)

     நீலமே முதல் -நீலம்முதலாக உள்ள; நல்மணி - நல்ல
ரத்தினங்களும்; நித்திலம் - முத்துக்களும்; மேல - மேற்பகுதியிலும்;
கீழ -
அடிப் பகுதியிலும்; பல்வேறுஒளி - மாறுபட்ட ஒளிகளை; வீசலால் -
பரப்புதலாலே; பாலின் வேலை முதல் - பாற்கடல் முதலான; பலவேலையும்
-
பல கடல்களும்; கால் - வாய்க்காலாக; கலந்தனவோ என - ஒன்று
சேர்ந்து விட்டனவோ என்று; காட்டும் - நினைக்கச் செய்யும்.

     நீலம்முதலானவற்றால் பல்வேறு நிறம்பெற்ற அகழி, பாற்கடல்
முதலானவை ஒன்று சேர்ந்து விட்டனவோ என்று நினைக்கச் செய்யும்.
காட்டுதல் - நினைப்பித்தல். 'மூரல் முறுவற்குறிகாட்டி முத்தே உயிரை
முடிப்பாயோ' (கம்ப. 6066) நவமணிகளால் வேறுவேறு நிறம் பெற்ற
அகழிகளுக்குப் பல்வேறு நிறம் பெற்ற கடல்கள் உவமை.            (155)