அனுமனுக்கும்அக்ககுமாரனுக்கும் நிகழும் போர்

5698.

கொன்றான் உடன் வரு குழுவை; சிலர் பலர்
    குறைகின்றார், உடல் குலைகின்றார்;
பின்றா நின்றனர்;
உதிரப் பெரு நிதி
    பெருகாநின்றன;அருகு ஆரும்
நின்றார்நின்றிலர்; தனி நின்றான், ஒரு
     நேமித்தேரொடும், அவன் நேரே
சென்றான்; வன்திறல் அயில் வாய் அம்புகள்
    தெரிகின்றான்; விழி எரிகின்றான்.

     உடன் வரு குழுவை -(தன்மேல் போருக்கு) திரண்டு வருகின்ற
அரக்கர் திரளை; கொன்றான் - (அனுமன்) கொன்றான்;
 சிலர்
குறைகின்றார் -
சிலஅரக்க வீரர்கள் இறந்தொழிந்தார்கள்; பலர் உடல்
குலைகின்றார் -
மற்றும் பல அரக்கர்கள் உடல் நடுக்குற்றனராய்;
பின்றா நின்றனர் -
பின்னிட்டுச் சென்றவராயினர்; உதிரப் பெருநிதி பெருகாநின்றன - இரத்த பேராறுகள் பெருகத் தலைப்பட்டன; அருகு
நின்றார்ஆரும் நின்றிலர் -
(அவ்வக்ககுமாரனுக்கு) அருகில் நின்றவர்கள்
எவரும்அங்கே நிற்க மாட்டாமல் அப்புறம் சென்று விட்டனர்; தனி
நின்றான் -
(துணையின்றி) தனித்து நின்ற அக்ககுமாரனும்; ஒரு நேமித்
தேரொடும் -
ஒப்பற்ற சக்கரங்களை உடைய தேரோடும்; அவன் நேரே
சென்றான் -
அந்த அனுமனுக்கு எதிரே சென்றவனாகி; விழி எரி கின்றான்
-
(கோபத்தால்) கண்கள் நெருப்பு எரிவது போல் விளங்க; வன் திறல்
அயில்வாய் அம்புகள் தெரிகின்றான் -
மிக்க திறமை வாய்ந்த கூரிய
முனைகளைஉடைய அம்புகளை அனுமன் மீது தேர்ந்து விடுகின்றவனானான்.
                                                           (31)