இந்திரசித்துபோருக்கு எழுதல் 5717. | அவ் வழி,அவ் உரை கேட்ட ஆண்தகை, வெவ் விழி எரிஉக, வெகுளி வீங்கினான்- எவ் வழி உலகமும்குலைய, இந்திரத் தெவ் அழிதரஉயர் விசயச் சீர்த்தியான். |
அவ்வழி -அப்போது;அவ்உரை கேட்ட ஆண்தகை - அக்ககுமாரன் இறந்தான் என்ற வார்த்தையைக் கேட்ட ஆண்மைக்குணம் உடையவனும்; இந்திரன் தெவ் அழி தர உயர் விசயம் சீர்த்தியான் - இந்திரனாகிய பகைவன் வலி அழியுமாறு உயர்ந்த வெற்றியைக் கொண்ட பெரும் புகழ் உடையவனுமாகிய மேகநாதன்; வெவ்விழி எரிஉக - (தனது) கொடிய கண்களினின்று நெருப்புச் சிந்தவும்; எவ்வழி உலகமும் குலைய - எந்த உலகமும் நடுங்கி வருந்தவும்; வெகுளி வீங்கினான் - கோபம் மிக்கவனானான். மேகநாதன்இந்திரசித்து எனப்பெயர் பெற்ற வரலாறு 'இந்திரத்தெவ் அழிதர உயர் விசயச் சீர்த்தியான்' என்ற தொடரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெவ் - பகை; வீங்குதல் - மிகுதல் (வீங்கினான்). (1) |