இராவணன் மாளிகைசென்று இந்திரசித்து பேசுதல் 

5723.

ஆய மாத்தானைதான் வந்து அண்மியது; அண்ம,
                                 ஆண்மைத்
தீய வாள்நிருதர் வேந்தர் சேர்ந்தவர் சேர, தேரின்
'ஏ' எனும்அளவில் வந்தான்; இராவணன் இருந்த,
                                  யாணர்
வாயில் தோய்கோயில் புக்கான்;-அருவி சோர்
                             வயிரக் கண்ணான்.

     ஆய - அவ்வாறே(பன்னீராயிரம் என்னும் தொகையினதாய்);
மாதானைதான் வந்து அண்மியது அண்ம -
குதிரைப்படை தானும் வந்து
அங்குக் கூடியது. அவ்வாறு அப்படைகள் பலவும் வந்து கூடவும்; ஆண்மை
தீயவாள் நிருதர் வேந்தர் -
வீரம் நிறைந்த கொடிய வாள் ஏந்திய அரக்கர்
அரசர்கள்; சேர்ந்தவர் சேர - திரண்டு தன் அருகில் வந்து சேரவும்; அருவி
சோர் வயிரக்கண்ணான் -
அருவிபோல நீர் ஒழுகுகின்ற பகைமை கொண்ட
கண்களை உடைய இந்திரசித்து; 'ஏ' எனும் அளவில் - விரைவிலே; தேரில்
வந்தான் -
தேரில் ஏறி வந்து; இராவணன் இருந்த - இராவணன்
வசித்திருந்த; யாணர் வாயில் தோய் கோயில் புக்கான் - அழகிய வாயில்
பொருந்திய அரண்மனையினுள் புகுந்தான்.

     முன் பாடலில்வேற்படை முதலிய ஐந்தினைக் கூறி, இதனுள்
குதிரைப்படை தனித்துக் கூறப்பட்டது. அனைத்துப் படைகளும் தன்னை வந்து
நெருங்கியதும், இந்திரசித்து, இராவணனின் அரண்மனைக்குச் சென்றான்.
யாணர் - அழகு; தோய் - பொருந்திய.                          (7)