இராவணனிடம்விடைபெற்று, இந்திரசித்து போர்க்குச் செல்லுதல் 5728. | ஆயினும்,ஐய ! நொய்தின், ஆண் தொழில் குரங்கை, யானே, "ஏ" எனும்அளவில் பற்றித் தருகுவென்; இடர் என்று ஒன்றும் நீ இனிஉழக்கற்பாலை அல்லை; நீடு இருத்தி' என்னா, போயினன்-அமரர்கோவைப் புகழொடு கொண்டு போந்தான். |
ஆயினும் -ஆனாலும்;ஐய ! - ஐயனே!; ஆண் தொழில் குரங்கை - ீவீரச் செயலில் சிறந்த இந்தக் குரங்கை; 'ஏ' எனும் அளவில் - மிகச் சுருங்கிய காலத்தில்; யானே நொய்தின் பற்றி தருகுவென் - நானே எளிதில்பிடித்துக் கொடுப்பேன்; இனி, நீ இடர் என்று ஒன்றும் உழக்கற்பாலைஅல்லை - இனிமேல் நீ துன்பம் ஒரு சிறிதையும் கொண்டு வருந்தவேண்டியதில்லை; நீடு இருத்தி என்னா - நீண்டகாலம் வாழ்ந்திருப்பாய்என்று சொல்லிவிட்டு; அமரர் கோவைப் புகழொடு கொண்டு போந்தான் -தேவர்க்கரசனான இந்திரனை, அவன் அடைந்திருந்த புகழ்களோடுசிறைப்பற்றிக் கொண்டு போனவனான மேகநாதன்; போயினன் - அனுமனைநோக்கிப் போர்க்களம் சென்றான். மிக்க அன்பினால், மைந்தன் (மேகநாதன்) தன் தந்தைக்கு வாழ்த்துக் கூறிவிட்டு, போர்க்களம் சென்றான் என்பது கருத்து. (12) |