5746. | ஆழியின்ஆய அரக்கர் பெரும் படை ஏழ் உலகும் இடம்இல் என ஈண்டிச் சூழும் எழுந்தனர்தோன்றினர்தம்மைக் கோழியின் ஒக்குவ கூவிடுகின்றான்.* |
(அனுமன்) ஏழ் உலகும்இடம்இல் என - ஏழ் உலகங்களும் இனிஇவர் இயங்கற்கு இடம் இல்லை என்று சொல்லும்படி; ஆழியின் ஆய அரக்கர் பெரும்படை - கடல்போலப் பெருகிய அரக்கர் சேனையாக; ஈண்டிச் சூழும் எழுந்தனர் தோன்றினர் தம்மை - நெருங்கிச் சூழ்ந்து புறப்பட்டுத் தோன்றியவர்களை; கோழியின் ஒக்குவ - கோழி கூப்பிடுவது போல; கூவிடுகின்றான் - அழைக்கின்றான். அனுமன் அரக்கர்சேனையைப் போருக்கு அழைப்பது கோழி கூவுதல் போல் உள்ளது என்பதாம். (30) |