5747. | மாருதி கூவமகிழ்ந்தனன் ஆகி, கூரிய புந்தியின்கோவன் குறிக்கொடு, கார் அன மேனிஅரக்கர்கள் காணா, வாரிகளூடு மடுத்தனவாளி.* |
மகிழ்ந்தனன்ஆகி மாருதி கூவ - மகிழ்ச்சி அடைந்துஅனுமன் அழைக்க; கூரிய புந்தியின் கோவன் குறிக்கொடு - நுண்ணுணர்வின் தலைவனாய அனுமனது குறிப்பைக் கொண்டு; கார்என மேனி அரக்கர்கள் காணா - கருமை நிறம் பெற்ற உடம்புடைய அரக்கர்கள் கண்டு (விட்ட); வாளி - அம்புகள்; வாரிகள் ஊடு மடுத்தன - கடலின் கண் போய் விழுந்தன. சீறி எழுந்தஅரக்கர்தம் அம்புகள் கணக்கிலவாதலின் கடலில் வீழ்ந்தன. கோவன் - அரசன் நுண்ணறிவில் திறன் வாய்ந்தவன் என்பது அனுமனைக் குறித்தது.'நன்குணர் மாருதி' (கம்ப. 4402) என்றதும் நோக்குக. (31) |