5749. | இந்திரன்முன்பும் இடும் திரள் சோதிச் சந்திர வெண்குடை தான் எதிர் கண்டான்; அந்தம் இல்கேள்வியன் ஆனைகள் காணா, சிந்தை உவந்து,சிரித்து உடன் நின்றான்.* |
அந்தம் இல்கேள்வியன் - முடிவற்ற கேள்விஞானத்தில் நிரம்பப் பெற்றவன் ஆகிய அனுமன்; ஆனைகள் காணா - இந்திர சித்துவைக் காத்துச் சுற்றிலும் நிற்கும் ஆனைத்திரளைக் கண்டு; இந்திரன் முன்பும் இடும் திரள் சோதிச் சந்திர வெண்குடை தான் எதிர்கண்டான் - இந்திரனுக்கு முன்னால் இடப்படும் சந்திரமயமான வெண்குடையையும் எதிர்கண்டு; சிந்தை உவந்து - இந்திரசித்து இங்கேதான் உள்ளான் என்று மனம் மகிழ்ந்து; சிரித்துஉடன் நின்றான் - சிரித்து கூட நின்றான். இந்திரன் முன்புஇடும் சந்திர வெண்குடை அவனை வென்றமையால் இந்திரசித்துவுக்கு உரியதாயிற்று. சுற்றிலும் கரிய ஆனைத் திரளின் இடையில் சந்திர வெண்குடை கண்டு இந்திர சித்துவைக் கண்டு கொண்டான் அனுமன் என்க. (33) |